கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி; தொடர்கின்றது ஆசிரியர்கள் போராட்டம்
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸுக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சு தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தால் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் சில பகுதிகளில் ஆசிரியர் சங்கங்களால் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
