கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு சித்திரை போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (14.04.2024) கறுப்பு சித்திரை என்ற பெயருடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் பவணி
இதன் போது மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு கொடி ஏந்தப்பட்டு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியன் மேடு, துறைநீலாவணை பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றல் நோக்கி வந்தடைந்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முற்பகல் பிரதே செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பொங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளனர்.

இதனால் அங்கு சிறு பதற்றம் எற்பட்டதோடு, பின்னர் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிருவாக அடக்கு முறைக்கும் அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என இன்று கறுப்பு சித்திரையாக பிரகடனப்படுத்துவதாகவும் எனவே பிரதேச செயலகத்திற்கான நிர்வாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் வெடித்துள்ள மோதல்! எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - நீண்ட வரிசையில் வாகனங்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri