ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் வெடித்துள்ள மோதல்! எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - நீண்ட வரிசையில் வாகனங்கள்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஈரானின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு
காத்திருக்கும் மக்கள்
யுத்த நிலை தீவிரமடைந்தால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதி எரிபொருள் நிரப்பும் பொருட்டு அங்குள்ள மக்கள் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வாகனங்களில் காத்திருக்கின்றனர்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் விதமாக நேற்றையதினம் இரவில் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்தது.
கடந்த நாட்களில், தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்த ஈரான் நேற்றைய தினம் இரவில், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியதாகவும், இதனை முறியடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri