யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போரட்டம் இன்று (22.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள்
"ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், எம்.சீ.ஏ (MCA) கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில், தொழிற்சங்க கூட்டுக் குழுவினருடன் இணைந்து ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை இம்மாதம் 2ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |