மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Batticaloa Sri Lanka Hospitals in Sri Lanka
By Kumar Sep 02, 2024 04:07 PM GMT
Report

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன்று(02.09.2024) பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

பொய்யான செய்திகள் 

வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், வதந்திகளை நம்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலையில் நோயாளிகள் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்டதாக ஒரு நபர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திக்கு எதிராகவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களை வைத்திருப்பவர்கள் தங்களது வருவாயை ஈட்டிக் கொள்வதற்காக பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தில் வைத்தியசாலை குறித்து ஒரு பதட்டமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Protest By Health Workers Batticaloa Hospital

இவற்றை பொதுமக்கள் நன்கு விளங்கி வைத்தியசாலை தொடர்பாக தங்களுக்கு இருக்கக்கூடிய நல்ல அபிப்பிராயங்களை இல்லாது ஒழித்து விடாது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதற்கும் தங்கியிருப்பதற்குமான தங்களது நம்பிக்கையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பொய்யான செய்திகளை பரப்புகின்ற நபர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களுக்கான சேவையை வழங்கும் போது சகல தரப்பினரையும் தங்களது கடமை சார்ந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என்கின்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் எங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றோம்.

உண்மையில் அந்த சம்பவம் பொய்யான ஒரு சம்பவம். கடமையில் ஈடுபடும் வைத்தியசாலை ஊழியர் எவரும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மது போதையில் கடமை செய்வதில்லை.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Protest By Health Workers Batticaloa Hospital

வேறு திணைக்களங்களைப் போன்று வைத்தியசாலை இல்லை இங்கு மேலதிகாரிகளின் மேற்பார்வை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் மேலதிகாரிகள் தங்களுடைய ஊழியர்களை பரிசீலனை செய்யும் போது மதுபோதையில் எந்த ஒரு ஊழியரும் கடமையாக்கினாலும் அவரை இலகுவாக கண்டறிந்து விட முடியும்.

எனவே ஏனைய திணைக்களங்களோடு ஒப்பிட்டு வைத்தியசாலை தொடர்பாக பிழையான தகவல்களை பரப்புவது பிழையானது.

குறித்த சம்பவமானது அன்று ஒரு நோயாளி தன்னுடைய மனைவியை இரவு வேளையில் வைத்திருக்க முற்பட்ட வேளை இன்னொரு நோயாளியுடன் கூட நிற்பவருடன் அசாதாரண நிலையை ஏற்படுத்த முற்பட்ட நிலையில் அந்த பெண்ணை விடுதியை விட்டு வெளியேற சொன்ன நிலையிலே இந்த பிரச்சனை உருவாகியது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Protest By Health Workers Batticaloa Hospital

ஆகவே நோயாளி தனக்கு சாதகமாக சூழலை உருவாக்கும் நோக்கில் குறித்த ஊழியர் மது போதையில் இருந்ததாக பொய்யான தகவலை பரப்பி இருக்கின்றார்.

ஆகவே மக்கள் இந்த விடயங்களில் கவனம் எடுக்க வேண்டும் என்கின்ற செய்தியை இவ்விடத்தில் வலுவாக பதிவு செய்கின்றோம்.

தயவுசெய்து சட்டத்தை நடைமுறை செய்பவரும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணை செய்பவரும் பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்ற யூடியூப் வியாபாரிகளுக்கு எதிராக தங்களுடைய விழிப்புணர்வை பதிவு செய்ய வேண்டும் என தாதியர்கள் சார்பாக ஏனைய சுகாதார ஊழியர்கள் சார்பாக மிக மன்றாட்டமாக பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

முல்லைத்தீவில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரை கூட்டம்

முல்லைத்தீவில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரை கூட்டம்

அனுரகுமார திசாநாயக்க விலையுயர்ந்த வாகனங்களில் பயணித்தமை குறித்து கட்சியின் விளக்கம்

அனுரகுமார திசாநாயக்க விலையுயர்ந்த வாகனங்களில் பயணித்தமை குறித்து கட்சியின் விளக்கம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US