ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதி திறப்பு : தொடரும் பிக்குகளின் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்ட களத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் வீதியின் எதிர் பக்கத்தில் உள்ள நடைபாதைக்கு நகர்ந்து சென்றுள்ளனர்.
தொடரும் போராட்டம்
முன்னதாக, கண்டியிலிருந்து கொழும்பு வரை சுதந்திர நடைபயணம் மூலம் வருகை தந்த பௌத்த பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தங்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவர்களால் வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை அகற்றுவதற்கு பொலிஸார் முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த போராட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, சஞ்சீவ எதிரிமான்ன, இந்திக அனுருத்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை தற்போது வீதி திறக்கப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள போதிலும், குறைவான எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் எதிர் நடைபாதையில் தொடர்ந்து தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகள்! பொலிஸாரோடு முறுகல்நிலை - களத்தில் கடும் பதற்றம்
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri