கிழக்கு மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Video)
கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையினை சேர்ந்தவர்கள் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 16 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்த கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று(16) ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிமனை வரை சென்று அங்கிருந்து காந்தி பூங்கா வரையில் பேரணி நடைபெற்றது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், தொழில்நுட்ப ஆய்வுகூட பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த பலர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பெருமளவில் இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்.
எங்கள் சேவைக்குரிய உரிமைகளைத் தந்துவிடு, றனுக்கின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து, சுகாதார நிர்வாக சேவையினை ஆரம்பி போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கவன ஈர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டம் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதையும்
காணமுடிந்ததுடன் சுகவீன விடுமுறைப் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின்
சேவைகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
