5 வயது சிறுவர்களும் ஆயுதம் ஏந்தினார்களா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
5 வயது சிறுவர்களும் ஆயுதம் ஏந்தினார்களா என கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டவர்கள் 5 வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியவர்களா, மரணச் சான்றிதழும் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம், தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா, கையில் ஒப்படைத்த குழந்தைகள் எங்கே, சர்வதேச சிறுவர் தினம் எமக்கு துக்க தினம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளிக்கப்பட்ட எமது குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.
குடும்பம் குடும்பமாக ஒப்படைத்த எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பால் குடி குழந்தையை கூட தாயுடன் கொண்டு சென்றார்கள்.
30இற்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்க முடியாது. சர்வதேசம் எமக்கான நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 29 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
