நந்தியை தவறாக பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள ஐ.ம.ச: கீதநாத் காசிலிங்கம்
அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் 'நந்தி'யை தவறாக பயன்படுத்தி இந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியமைத் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மன்னிப்பை கோர வேண்டும் என பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
The @sjbsrilanka need to get clever Tamil writers.
— G. Cassilingham (@CassilingamG) November 17, 2021
While in their desperation to criticize the Govt, they have hurt the sentiments of the Hindu community by misusing 'நந்தி' in Parliament. Strongly condemn this & call upon SJB to issue an apology. #Srilanka pic.twitter.com/x5lfQwPuZN
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் பொலிஸாரினால் ஏற்பட்ட இடையூறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது “நந்தி ஒழிக, நீதி வாழ்க” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.