கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Mannar SL Protest Protest
By Kumar Aug 14, 2026 06:19 AM GMT
Report

மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (14.08.2026) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேய்ச்சல்தரை ஆக்கிரமிப்பு மற்றும் கால்நடைகளின் இறப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனை மேய்ச்சல்தரைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Mayilathamadu Madhavanai

குறிப்பாக, மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக கால்நடைகள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து ஆழமான கவலை தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு, வெடிபொருட்கள், மின்சார வேலிகள் மற்றும் வாள்வெட்டு போன்ற வன்முறைச் செயல்களால் பல கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பது போராட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கொல்லப்பட்ட கால்நடைகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையொன்று "மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடைகளின் அவலநிலை" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டின் பல்வேறு திகதிகளில் நடைபெற்ற கால்நடை இறப்பு சம்பவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Mayilathamadu Madhavanai

பாரம்பரிய நிலங்களை மீட்க கோரிக்கை

"எமது காணி, எமது குரல்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் தங்களது பாரம்பரிய நிலங்களை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வலி வடக்கு (யாழ்ப்பாணம்), கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு), மயிலத்தமடு மற்றும் மாதவனை (மட்டக்களப்பு) ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக நிலங்களை இழந்து தவிக்கும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் பதாகையொன்றும் ஏந்தப்பட்டிருந்தது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Mayilathamadu Madhavanai

அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி

இது ஒரு ஜனநாயக ரீதியிலான, கவனத்தை ஈர்க்கும் போராட்டம் என MSEDO நிறுவனம் தெரிவித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "மக்களின் பசி தீர்க்க மக்கள் காணிகளில் படைகள் பயிரிடுவதா?" என்று கேள்வியெழுப்பும் பதாகையையும் ஏந்தியிருந்தனர்.

மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் கமல அமைப்பு, MSEDO உடன் இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest At Mayilathamadu Madhavanai

தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் மேய்ச்சல்தரைகளையும், பூர்வீக நிலங்களையும் மீட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பண்ணையாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாகும்.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்

மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மேலதிக தகவல் - ருசாத்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US