கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்
சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (16.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் கடந்த 08.11.2026ம் திகதி இடம்பெற்ற கூட்டு பாலியல் துன்புறுத்தலை கண்டித்தும், கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்
குறித்த கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு போதைப்பொருளே காரணம் எனவும், எனவே போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.


