கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் முன் பெருமளவு அதிரடிப்படையினர் குவிப்பு - மீண்டும் நீர்த்தாரை பிரயோம் (Live)
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட ஆர்ப்பாட்டத்திலிருந்து பின்வாங்க மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் வீதியை மறித்து பெருமளவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வாகன நெரிசல்
ஆர்ப்பாட்டம் காரணமாக துன்முல்லை சந்தி மற்றும் Reid அவென்யூ பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.