கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக குவிக்கப்படும் பொலிஸார்! (Video)
கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருவோரை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஐ.நா காரியாலயத்தில் இந்த விடயம் தொடர்பில் முறையிட்டதையிட்டு ஐ.நா காரியாலய அதிகாரிகள் இரு தரப்பினருடனும் பேசியுள்ளனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு ஐந்து மணி வரை மாத்திரமே இருக்க முடியும் எனவும், ஐந்து மணிக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் முன்னெடுத்து வருவோருக்கு அறிவுறுத்தலொன்று பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 3.30 மணிக்கு பின்னர் குறித்த இடத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடும் யாரும் அப்பகுதியில் இருக்கக்கூடாது என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா காரியாலயத்தில் பொலிஸாரின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை மாலை 5 மணிவரை முன்னெடுக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டுள்ளனர்.
எனினும் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே கால அவகாசம் தந்துள்ளதுடன், அதற்குள் சத்தியாக்கிரக போராட்டத்தை முடித்து விட்டு அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.













16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
