கொழும்பில் முடங்கிய வீதி! அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் - பொலிஸார் குவிப்பு (Live)
கொழும்பு - விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு முன்பாக இன்று (23.01.2023) இலங்கை துறைமுக அதிகாரசபை தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதியின் குறிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை தாண்டி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.









இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
