இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழையும் கசிப்பு வியாபாரிகள்! வீதிக்கு இறங்கிய மக்கள்
மட்டக்களப்பு - திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிஸாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வரும் நிலையில் இதனை ஒழித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (03.10.2026) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள நேற்று மாலை திராய்மடுவில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.

ஏற்பட்டுள்ள அபாய நிலை
இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில், சட்டவிரோத மதுபான விற்பனையால் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இந்த வியாபாரத்தை முற்றாக பொலிஸார் ஒழிக்க வேண்டும். சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தால் கிராமமே அழியும் அபாயம் உள்ளது.

அத்துடன் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் கைகளை பிடித்து இழுத்து அட்டகாசம் புரிந்து வருகின்றனர் என கவலை தெரிவித்துள்ளனர்.

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan