யாழில் ரணிலிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்! என்ன கோபம் என்று கேள்வி எழுப்புகிறார் பிரதமர்
யாழ். சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வீதியில் இறங்கியுள்ள மக்களுக்கு என்ன கோபம்? அவர் என்ன குற்றம் செய்தார்? என பிரதமர் தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை வினவியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதாரண பிரஜை அல்ல. அவர் இலங்கை நாட்டின் தலைவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒரு தலைவரே ரணில். அவரின் யாழ். விஜயத்தை அங்குள்ள ஒரு குழுவினர் எதிர்த்துள்ளனர்.
இதற்கமைய அவர்களைப் பின்னால் நின்று மற்றொரு குழுவினர் இயக்கியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது அவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.

ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு
பொலிஸ் தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டம் செய்தமையால் ஆபத்து நிலைமையை உணர்ந்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
இது ஜனநாயக நாடு. வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால், தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam