யாழில் மின்சார தடைக்கு எதிராக இருளில் போராட்டம் (VIDEO)
மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்றிரவு 8.30 மணியளவில் ஏ - 9 பிரதான வீதி, நல்லூர் - செம்மணி வளைவுப் பகுதியில் ஒன்றுகூடியவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போது பரவலாக பல மணிநேர மின்சாரத் தடை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம்
மணிவண்ணன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன்,
ச.சுகிர்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam