தனியாருக்கு வழங்கப்படவுள்ள மில்கோ நிறுவனம்: மட்டக்களப்பில் போராட்டம்
மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டாம் என தெரிவித்து மட்டக்களப்பு (Batticaloa) பால் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் செவ்வாய்கிழமை (16.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த பால் பண்ணையாளர்கள் பால் சேகரிப்பு நிலையத்திலிருந்து, பால் கொள்கலன்களுடன், அருகிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ஒன்றுகூடி தேங்காய் உடைத்து, கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
போராட்டம் தொடரும்
இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு நாம் பாலை வழங்கி கொண்டு வருகிறோம். அதனால் எமக்கு இதுவரையில் எதுவித இடர்பாடுகளும் இல்லை.
எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு வழங்குகிறது. மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல், மரணச் செலவு, திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர். எனவே, இவ்வாறான நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம்.
எனவே, இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தாவிட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
