குச்சவெளி பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக போராட்டம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபையின் தவிசாளருக்கு எதிராக அமைதி வழிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (06.07.2026) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினை குறித்த பிரதேசசபையின் சில உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நீதி கோரி போராட்டம்
குறித்த சபையின் சிற்றூழியர் ஒருவரை தவிசாளர் தாக்கியதால் நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
“ஊழியருடனான தவிசாளரின் அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கிறோம், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவரை மீ்ண்டும் தவிசாளராக தொடரவிட்டதன் விளைவே இது, அலுவலக அரசியலில் அலுவலர்களை தூண்டாதே பழிவாங்கலை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

