மட்டக்களப்பில் மும்மத தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டமையை எதிர்த்து போராட்டம் (Video)
மட்டக்களப்பு மயில்த்தமடு பகுதியில் பௌத்த மதகுரு தலைமையிலான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களினால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டமையை வன்மையாக கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத் தலைவி அமலநாயகி தலைமையில் நேற்று (23.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கோசங்களையும் எழுப்பினர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பின் எல்லை பகுதிகள் பெரும்பான்மையினத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்றது இதனால் பண்ணை தொழிலாழிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்றுமுன்தினம் (22.8.2023)மாதவளை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பண்ணையாளர்களின் அழைப்பின் பெயரில் மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
வெற்றுத்தாலில் கையெழுத்து
ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் இச்செய்தி வெளிவரக்கூடாது எனக் கூறி வெற்றுத்தாலில் கையெழுத்து பெற்றமை ஊடகத் துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும்.
இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் உட்பட சமூக செயற்பாடுகள் தற்போது இனவாதம் கொண்ட காவி உடைதரித்த பிக்குகளினாலும் காடையர்களாலும் புதிதாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக தொடங்கியுள்ளனர்.
இதேவேளை சைவ,கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் அச்சுறுதியமை மிகவும் வருத்தத்தக்கது . எனவே சர்வதேசம் உடனடியாக இவ்விடையம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேச நீதி பொறிமுறைக்குள் இலங்கையை உட்படுத்தி சர்வதேச நீதிமன்றில் குற்றம்
சாட்டப்பட்டவர்களின் நிறுத்த வேண்டும் எனவும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்
பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
















மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
