மீரிஹான போராட்டத்தின் தாக்கம்! நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்!
நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தளம் பகுதியில் மதுரங்குள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
எரிபொருளை கோரியே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக புத்தளம்- சிலாபம் வீதியில் வாகன நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மருதானையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச குடும்ப நல சுகாதார சேவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதன் காரணமாக டீன்ஸ் வீதியில் சுகாதார அமைச்சுக்கு முன்னால் நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மொரட்டுவை பிரதேசத்திலும் தச்சு தொழிலில் ஈடுபடுவோர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
May you like this Video





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
