காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தாக்குவதற்கு சதி! தைரியமாக அழைப்புவிடும் முன்னணி செயற்பாட்டாளர்(Live)
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.
இன்று(09.12.2022) சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாகும். இதன் காரணமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இன்று காலி முகத்திடலில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் டேனிஸ் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
வழமையை போன்று இன்றும் காலிமுகத்திடலில் எமது போராட்டம் இடம்பெறும்.
இதன்போது எம்மீது தாக்குதல் நடத்துவதற்கு சில தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் எதை கண்டும் நாம் பயப்படபோவதில்லை.காலிமுகத்திடலில் போராட்டம் நடைபெறும்.
எனவே மக்கள் எமக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் இணைந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.




