இலங்கை வங்கி தலைவரின் ஊழல் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம்(Video)
இலங்கை வங்கி தலைவரின் சட்டத்திற்கு முரணான ஊழல் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் அவரின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் சங்கத்தின் தோழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினரால், இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு முன்பாக இன்று(15) முன்னெடுக்கபட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு டீ.எப்.சி.சி வங்கி, கொமர்சல் வங்கி மற்றும் ஏனைய வங்கியை சார்ந்தவர்களும் வருகை தந்து ஆதரவை வழங்கியுள்ளனர்.