வட மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை இயங்காமல் செய்யும் முயற்சியை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமைந்துள்ள வட மாகாண பெண் நோயியல் மருத்துவ நிலையத்தை இயங்காமல் செய்து அங்குள்ள நவீன மருத்துவ உபகரணங்களை வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று (29.08.2025) கிளிநொச்சி வைத்தியசாலை முன்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஏற்பாடு
இந்த கவனயீர்ப்பு போாட்டத்தை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் ஏற்பாடு செய்து முன்னெடுத்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு இன்றுவரை இயங்காத நிலையில் காணப்படுகின்ற இச்சிகிச்சை பிரிவை ஆரம்பிக்க வேண்டுமென்றும், தேவையான ஆளணிகளை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், பிரதேச மக்கள் நலன்புரி சங்க நிர்வாகத்தினர் என பல கலந்து கொண்டிருந்தனர்.

