சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (20) ஒன்று கூடிய வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தெகியத்தன் கண்டி என்னும் இடத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற வைத்தியரும் சுகாதார ஊழியரும் பொதுமக்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையினரின் கோரிக்கை
இந்த தாக்குதலை கண்டித்தும், சுகாதார துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும், சுகாதார துறையினர் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துமாறு கோரியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தும் கோஷங்களையும் எழுப்பியுள்ளார்கள்.



