அமைச்சரை பதவி விலகுமாறு கோரி போராட்டம்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகப் பாதையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக கடமை ஆற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்றைய தினம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் நிலக்கரி கொள்வனவில் பாரியளவு மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் பின்னணியில் இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக கோசங்களை எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
you may like this
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam