கடற்றொழிலாளர்களின் விடயத்தில் பாராமுகமாக செயற்படும் நிதியமைச்சு: மனுஷ குற்றச்சாட்டு
கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கடற்றொழில்துறை தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகள் எவ்வித புரிதலும் இன்றி செயற்படுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கரு சரு திட்டத்தின் மூலம் கடற்றொழிலாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று(17) தொழில் திணைக்கள கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை இந்த அதிகாரிகளால் தயாரிக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரு சரு திட்டம்
நாட்டின் பொருளாதாரத்திற்கு கடற்றொழில் துறை ஆற்றிவரும் பங்களிப்பை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
காலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் என்ற வகையில், கடற்றொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் தொழிலில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தனக்கு நல்ல புரிதல் உண்டு.
கரு சரு திட்டத்தின் மூலம் இந்த நாட்டின் தொழிலாளிகள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம்.
உலகின் எனையே நாடுகளில் கடற்றொழிலாளர்கள், நீர் குழாய் பொருத்தினர், வைத்தியர் மற்றும் பொறியலாளர் என வேறுபட்டியின்றி அனைவரும் சமூகத்தில் சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள்.
அவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான கௌரவம் அளிக்கப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழிலாளிகளின் சம்பளத்தில் வித்தியாசம் உள்ள போதும் எந்தொரு நபரின் அங்கீகாரமும் கௌரவமும் மாற்றமடையாது.
எனவே அந்த நாடுகளில் எல்லா வேலைகளும் கௌரவத்துக்குரியதாகவே கருதப்படுகிறது. எமது நாட்டில் கட்சிகள், இனங்கள், சாதிகள், என தொழிற்சங்க ரீதியாகப் தனித் தனி பலன்களை பெற்றுக்கொளவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முறைசார் துறையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு எமது அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு சட்டம்
நாட்டில் 25 இலட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் பொருளாதாரத்திற்கு 60இலட்சம் பேர் பங்களிக்கின்றனர்.
அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் இந்த கடற்றொழில் சமூகத்தை பாதுகாக்க எந்தவொரு முறையான திட்டமும் இல்லை.
இந்த 60 இலட்சம் பேருக்கு கௌரவத்தையும் , பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
விசேடமாக தன் கையில் பணப் புழக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும் ஆயுதமாகவே நாம் இந்த 'கருசரு' வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
தொழிலாளர் சட்டத்தை மாற்றி தொழில் பாதுகாப்பு சட்டம் அமைத்து அதில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்போம்.
கடற்றொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலையில், வேலையிழந்த நிலையில் இவர்களை கவனித்துக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கவே நாம் இந்த பணியை செய்து வருகிறோம்.
மூன்று மாதங்களுக்குள் நாட்டின் சகல தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நாம் உறுதியளித்திருந்தோம்.
அதன் மூலம் விவசாயக் காப்புறுதி, உழவர் காப்புறுதி, தொழிலாளர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்ற அனைத்து விதமான நிதிகளையும் திரட்டி உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
காப்புறுதி திட்டம்
இது தொடர்பான முன்மொழிவு நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது. 55 வயதுக்கு பிறகு நீங்களும் ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியம் போன்ற பொருளாதார நிதிகளைப் பெற முடியும். வேண்டுமானால் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம்.
இது நாடு தழுவிய திட்டமாகும். இனிமேல் கடற்றொழிலாளர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் கடலுக்கு செல்ல அனுமதி பத்திரம் வழங்கப்படாது.
கடலுக்கு செல்பவர்கள் தங்களை காப்புறுதி செய்துகொள்ள வேண்டும், மேலும் இந்த காப்புறுதி பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
ஆனால் படகு பழுதாகி மக்கள் அனைவரும் உயிரிழந்தால் மட்டுமே காப்புறுதி செலுத்தப்படுகிறது.
இதில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த விடயங்கள் எமது அமைச்சுடன் தொடர்புடையவை அல்ல. கடற்றொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள்.
ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் தேவையானதை நாங்கள் செய்கிறோம்.
உலகில் உள்ள மற்ற கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைப் நாம் பயன்படுத்துகிறோமா?அவ்வாறு பயணத்துவதனால் எமது விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம்.
இவற்றை சட்டங்களாக முன்வைக்க இருக்கிறோம். சில தருணங்களில் நாங்கள் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்க முயல்வது போன்ற உணர்வு ஏற்படும்.
ஏனைய நிறுவனங்களுடன் பேசி முரண்பாடின்றி இவற்றை மேற்கொள்ள முயன்று வருகின்றோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
