எமது கல்வியை பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்: ஜெஸ்மி எம்.மூஸா
ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக எமது கல்வியை பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (8) அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
கல்வி சமூகத்தை சீர்குலைத்த ஜனாதிபதி

“நாளை சகல அமைப்புகளினால் ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டம் இடம்பெற தயார்படுத்தல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்வி உரிமைக்காக எதிர்கால மாணவ தலைவர்களை பாதுகாப்பதற்கு சகல தரப்பும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
கடந்த 4 வருடங்கள் தற்போதைய ஜனாதிபதி கல்வி சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 வருடங்கள் அவர் ஆட்சியில் இருப்பதை விட நாம் அனைவரும் இணைந்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற வேண்டும்”என்றார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam