நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மனித உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேமா வீரகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் வைத்தியர் கருத்து வெளியிடுகையில்,
நீர் அருந்துவது அவசியம்
வெயிலில் பயணம் செய்தால் ஹெல்மெட் அல்லது குடை மற்றும் சன் கிரீம் பயன்படுத்துமாறு வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்றவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது உடலுக்கு நல்லது என்று குறிப்பிடும் கலாநிதி ஹேமா வீரகோன், நாளொன்றுக்கு அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுநீர் சம்பந்தமான நோய்கள்
கடுமையான வெயில் தீங்கு விளைவிக்கும் என்பதால், குழந்தைகளை கடுமையான வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுவதாக அத்தியாவசிய விடயங்களில் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
