ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
''வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கொள்கைக் கோட்பாடுகள்
பலம்பொருந்திய உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காக கொண்டு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், எளிமையான வாழ்க்கை – ஆரோக்கியமான நாடு, கண்ணியமான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு, நவீனமான வாழ்க்கை – வளமான நாடு, நன்மதிப்பான வாழ்க்கை – நிலைதளராத நாடு ஆகிய பிரதான 04 துறைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.
குறித்த 04 துறைகளின் கீழ் 40 உப துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’
அந்தந்த துறைகளுக்குரிய கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் வெவ்வேறாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தத்தமது பணிகளுக்கமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்தவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
