மகிந்தவின் வாழ்க்கை வரலாற்று படம் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksha) வாழ்க்கை வரலாறு, ஒரு வரலாற்றுப் படமாக தயாரிக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இது தொடர்பான திட்டங்கள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறும் திரைப்படம்
ஊடகங்களிடம் பேசிய அவர்,
வாழ்க்கை வரலாற்றுப் படத்துடன் கூடுதலாக, வாழ்க்கை வரலாறு தொடர்பான ஒரு குறும்படமும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், அவர் நடிப்பாரா? என்று கேட்டபோது, அதில் தனது குழந்தைப் பருவ விபரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நடிக்க விருப்பமுள்ள எவரும் இந்தப் பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
