சிறுவர்களுக்கான தண்டனை தொடர்பான உத்தேச சட்டம்: மல்கம் ரஞ்சித் அறிவுரை
சிறுவர்களுக்கான தண்டனை தொடர்பான உத்தேச சட்டத்தை நடைமுறைபடுத்தும் போது மேற்கத்திய நாடுகளின் சில சட்டங்கள் இலங்கையுடன் முற்றிலும் பொருந்தாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கத்தின் மூலம் சிறுவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்பதற்காக, மேற்கத்திய உலகின் அனைத்து சட்டங்களும் இலங்கையின் கல்வி முறையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்றும் கர்த்னால் வலியுறுத்தியுள்ளார்.
கர்தினால் வேண்டுகோள்
இந்தத் திட்டம், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே பிளவை உருவாக்குகிறது. பெற்றோர்கள் இப்படி கட்டுப்படுத்தப்பட்டால், ஆசிரியர்களால் சுதந்திரமாக சிந்திக்கக்கூட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் சிறப்பாகச் செயற்படுவது இலங்கைக்கு அவசியமில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் மரியாதைக்குரிய சொந்த கலாசாரம், அமைப்புகள் மற்றும் மதிப்புகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம், சிறுவர்களின் மரியாதை, அன்பு மற்றும் பக்தியை வளர்க்கும் போக்கைத் தடுக்க வேண்டாம் என்று கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
