பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சிறப்பு படை: முன்வைக்கப்பட்ட கோரிக்கை
போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தனியான பாதுகாப்பு படையொன்றை ஸ்தாபிக்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலினால் நாட்டின் சிறுவர்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒன்லைன் பணப்பறிமாற்றம் போன்ற முறைகளின் மூலம் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பாடசாலை மாணவர்களை அடிமைப்படுத்தியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியள்ளார்.
கடுமையான சட்ட அமைப்பு
இவ்வாறான முறைப்பாடுகளை நகர மற்றும் கிராம பாடசாலைகளுக்கு செல்லும் போது பெற்றோர்கள் தம்மிடம் கூறுவதாக எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
மேலும், பாடசாலை சமூகத்திலிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், சிறுவர்களை மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்ட அமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
