போரின்போது இடம்பெற்ற கொடுமைகள்! வெளிவந்த தகவல்கள்

Srilanka War Meeting HumanRights
By Benat Feb 17, 2022 12:10 PM GMT
Report

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்  என சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சட்டத்தரணியும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாலினம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான பிரியா கோபாலன் தெரிவித்துள்ளார். 

மேலும், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

'இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்' என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று முன்தினம்   இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு 'மோதலுடன் தொடர்புடைய துஷ்பிரயோக வன்முறைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை' தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மோதலுடன் தொடர்புடைய மிகமோசமான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக அரசின்கீழ் இயங்கிய தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றதாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த போராளிகள் அனுப்பிவைக்கப்பட்ட புனர்வாழ்வளித்தல் முகாம்களிலும் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதுமாத்திரமன்றி தமது காணாமல்போன தமது கணவன் அல்லது சகோதரன் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் தொடர்பில் தகவல் அறிவதற்காகச்சென்ற பெண்கள் வன்புணர்விற்கும், துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போரில் கணவனை இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்களைப் பொறுத்தமட்டில், அப்பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படும் சம்பவங்களும் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளாகவோ அல்லது இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கியவர்களாகவோ அல்லது விடுதலைப்புலிகளால் வலுகட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டவர்களாகவோ இருக்கலாம்.

போரில் அவர்களுடைய பங்களிப்பு எவ்வாறானதாகவும் இருக்கலாம். இருப்பினும் நீதி வழங்கலின்போது அவர்கள் எதிர்கொண்ட பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களில், இதுகுறித்து சமூகத்தின் பிரதிபலிப்புப் பற்றிய அச்சமும் ஒருவித ஒதுக்கப்பட்ட சிந்தனையும் ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. அதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

எனவே அவர்களுக்கான நீதியை மறுக்கமுடியாது. மாறாக நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறும் பட்சத்தில், அது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்ட சிந்தனையும் அச்சமும் மேலும் வலுவடைவதற்கே வழிவகுக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் மோதலின்போது இடம்பெற்ற  துஷ்பிரயோகங்கச் சம்பவங்கள் தொடர்பில் ஆவணப்படுத்துவது அவசியமாகும்.

அதன்போது பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு ஏற்றவாறான சூழலை உருவாக்குவதுடன் அவர்களது உடலியல் ரீதியான பாதுகாப்பையும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தையும் உறுதிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.   

-வீரகேசரி-

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US