தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார பயணம் இன்று ஆரம்பம்
தமிழ்ப் பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரசார பயணம் இன்று (23) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் (Jaffna) - சக்கோட்டை, கொடிமுனையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகரும் என திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிற்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரசாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும்.
ஜனாதிபதி தேர்தல்
அதேவேளை வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரசாரப்பணிகளும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து தெரிவு செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரசார நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri