சஜித்தை ஆதரித்து தலவாக்கலையில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள மலையக மக்கள் முன்னணி
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவளித்து நுவரெலியா - தலவாக்கலையில் மலையக மக்கள் முன்னணி முதலாவது பிரசார கூட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த கூட்டமானது, இன்று (10) தலவாக்கலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இக்கூட்டம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பெருந்தோட்ட மக்கள்
இதன்போது, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தையும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிடம் வைத்துள்ள ஒப்பந்தம் தொடர்பிலும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களை சம்பள விடயத்தில் ஏமாற்றி விட்டதாகவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றி பெற போவதாகவும் இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில், மலையக மக்கள் முன்னணியின் கட்சி முக்கியஸ்தர்கள், கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
