முப்படைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பதவியுயர்வுகள்..!
இலங்கையின் முப்படைகளிலும் பணியாற்றும், 12,434 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துக்கு, ஒரு சக்திவாய்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், இந்த பதவியுயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போர்வீரர் நினைவு தினம்
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன், இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10,093 ஏனைய வீரர்கள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 வீரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன
அதேநேரம் விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும் 868 வீரர்களுக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
