மாணவர்களை முழங்காலில் நிற்கவைத்து கடுமையாகத் தாக்கிய அதிபர்
அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.
பிரஸ்தாப பாடசாலையில் கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றுள்ளது. இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறியடித்து விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் மீதான தாக்குதல்
இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் இன்று சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam