திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதவி உயர்வு
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோராள கரும்பு, சோளம்,மரமுந்திரிகை, மிளகாய், கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு போக பயிர்ச்செய்கை அபிவிருத்தி,அதனோடு இணைந்த கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தமக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இவர் தம் கடமைகளை இராஜாங்க அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2020.10.26 ம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றதுடன்
குறுகிய காலத்தில் மாவட்ட மக்களின் பல்வேறு தேவைகளை விசேட கவனம் செலுத்தி
செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam