கோட்டாபயவின் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரிகேடியர் மகிந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
மகிந்த ரணசிங்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் அதிகாரியாவார்.
கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் சென்றது முதல் பாதுகாப்பு வழங்கி வரும் மகிந்த ரணசிங்க

கடந்த ஜூலை 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை கைப்பற்றிய பின், தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு மகிந்த ரணசிங்கவே பாதுகாப்பு வழங்கி வந்தார்.
சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திலும் பாதுகாப்புக்கு பொறுப்பு

கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்ற போது, அவர்களுடன் மகிந்த ரணசிங்கவும் புறப்பட்டுச் சென்றார்.
அத்துடன் சிங்கப்பூர் மட்டுமல்லாது தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி தங்கியிருந்த போது, அவருக்கு மகிந்த ரணசிங்கவே பாதுகாப்பு வழங்கி வந்தார்.
நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள அவருக்கான உத்தியோபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.
அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உட்பட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri