திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியான 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில்,இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 24ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல் காதர், ஏ. நவிநாத், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்திருந்தது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
