தமிழர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! பிரதான சந்தேகநபரின் தாயார் வெளியிட்ட முக்கிய தகவல்
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்தில் தமிழர், முஸ்லிம் என இரு பொலிஸாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,துப்பாக்கிச்சூட்டினை நடத்திவிட்டு சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்ததுடன்,பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,குறித்த சந்தேகநபர் துப்பாக்கிசூட்டினை நடத்திவிட்டு இரு துப்பாக்கி மற்றும் ரவை குண்டுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயை பார்த்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சந்தேகநபரின் தாயார் பல விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.அவர் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது,
எனது மகன் உண்மையில் மிகவும் அமைதியான ,ஒழுக்கமான சுபாவம் கொண்டவர்,அவர் எப்பொழுதும் யார் பிரச்சினைக்கும் செல்பவர் கிடையாது.அவருக்கு பொலிஸ் நிலையத்தில் நிறைய பிரச்சினைகள் காணப்பட்டது. அவரின் விடுமுறை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
கசிப்பு உற்பத்தி தொடர்பான குற்றச்செயல்களை கண்டுப்பிடிக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட வண்ணம் இருந்தது.அவர் மூன்று சம்பவங்களை கண்டுப்பிடித்தார். பொலிஸ் நிலையத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே பொறுமையை இழந்து இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
என்ன செய்வது உண்மையில் இது மிகவும் துயர சம்பவம் தான். வீட்டிற்கு வருகை தந்து எனது காலில் விழுந்து சென்றார்.செய்திகளில் பல விடயங்கள் உண்மைக்கு புறம்பாக கூறப்படுகின்றது.எனது மகனுக்கு குடி பழக்கம் கிடையாது.அவருக்கு தொடர்ச்சியாக பொலிஸ் நிலையத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த விடயங்களையும் என்னிடம் கூறவில்லை.கூறியிருந்தாள். தொழிலை விட்டுவிட்டு வருமாறு கூறியிருப்பேன்.பொறுமையை இழந்து இவ்வாறு கோபத்தில் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொலைக்கு பின்னரும் “தாய் பாசத்தை மறக்காத“ பொலிஸ் அலுவலர்



