இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

South Eastern University of Sri Lanka
By Rusath Oct 31, 2022 06:19 AM GMT
Report

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கணேசராஜா மற்றும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரஃப், கலாநிதி. எம்.ஏ.எஸ்.எப். சாதியா பௌஸர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேரவைத் தீர்மானத்தின்படி மூவருக்கு பேராசிரியர்களாக சனிக்கிழமை (29.10.2022) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுபவர்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு | Promoted Professors Faculty Of Arts University

இதில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கே. கணேசராஜா எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார்.

விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது பாடசாலைக் கல்வியை காரைதீவு R.K.M.ஆண்கள் பாடசாலையிலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் தனது உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விஷேட துறையிலும் பெற்றுக்கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணிப்பட்டத்தையும் பெற்ற இவர் தனது கலாநிதிப்பட்டத்தை தமிழ் நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் நிறைவுசெய்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2006 தொடக்கம் 2009 காலம் வரை சமூக விஞ்ஞானத்துறையின் தலைவராகவும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள இவர் அளவையியல், மெய்யியல், உளவளத்துணை போன்ற துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளதுடன் தனது துறைசார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ளார்.

மேலும் 25.10.2022 அன்று நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது ஸ்தாபகர் விழாவில் நிரந்தர விரிவுரையாளராக 25 வருடங்களைப் பூர்த்திசெய்தமையையிட்டு தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரினால் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு | Promoted Professors Faculty Of Arts University

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான ஏ. எப்.எம். அஷ்ரஃப் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார். அப்துல் பரீட் - சித்தி பளீலா ஆகியோரின் புதல்வரான இவர், திருகோணமலை மாவட்ட சீனக்குடாவை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது திருகோணமலையில் வசித்து வருகிறார். இவர் தனது பாடசாலைக் கல்வியை தி/ வெள்ளைமணல் அல்- அஸ்ஹர் மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

தமிழ்த்துறையில் முதல் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் (1998), முதுதத்துவமாணிப் பட்டத்தையும் (2007) பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் (2011) பெற்றுக்கொண்ட இவர், மொழிபெயர்ப்பு, மொழியியல், நவீன இலக்கியம், திறனாய்வு போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றார். தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை தனது துறைசார்ந்து முன்வைத்து வருகின்றார்.

03.01.1999 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் நிரந்தர விரிவுரையாளரானார். பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், கலைப்பீட பட்டப்பின் கற்கைகள் நிறுவகத்தின் ஸ்தாபக இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஈழத்து நவீன கவிதை முன்னோடிகள் மஹாகவியும் நீலாவணனும், தமிழ்மொழி ஓர் அறிமுகக் கையேடு, மொழி பெயர்ப்பியல், இருபதாம் நூற்றாணாடு ஈழத்து இலக்கிய ஆளுமைகள் என்பன இவரது நூல்களாகும்.

பித்தன் கே.எம்.ஷாவின் சிறுகதைகள் என்ற நூல் இவரால் தொகுக்கப்பட்டதாகும். அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதை நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது. 2020.12.28 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு | Promoted Professors Faculty Of Arts University

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான திருமதி எம்.ஏ. எஸ்.எப். சாதியா பௌஸர் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார். முஹம்மது அப்துல் சலாம் - சபீனத்தும்மா ஆகியோரின் புதல்வியான இவர், கண்டி மாவட்டத்தில் உள்ள கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். களுகமுவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கம்பளை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான இவர், தனது பட்டக் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

அப்பல்கலைகழகத்திலேயே முதுகலைமாணி (2001), முதுதத்துவமாணி (2008), கலாநிதி (2018) ஆகிய பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். மலையகக் கவிதைகள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பன இவரது பிரதான ஆய்வுத் துறைகளாக இருப்பதோடு மொழியியல், நவீன தமிழ், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்பவற்றில் ஆர்வம் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

இவரது ஆய்வுகள் பலவும் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்களில் பிரசுரம் கண்டுள்ளன.1999 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், 2003 இல் நிரந்தர விரிவுரையாளரானார். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், மாணவர் வழிப்படுத்துநராகவும் கடமையாற்றியுள்ளதோடு, தற்போது மொழித்துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனைகள், பாரம்பரிய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் போக்குகள், ஆய்வடங்கல் (இஸ்லாமிய தமிழ் இலக்கியம்), புதுகுஷ்ஷாம் :வரலாறும் புனைவும், சீறாப்புராணம் : வரலாறும் புனைவும், மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும், மலையகக் கவிதைகளும் மக்களும் என்பன இவரது நூல்களாகும்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு | Promoted Professors Faculty Of Arts University

இவை பல்வேறு நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும், நூற்தொகுதிகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வரிசையில் முதல் முஸ்லிம் பெண் பேராசிரியை என்ற பெருமையைப் பெறும் இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பெண் பேராசிரியை ஆவார்.

இவரது முயற்சிக்கு தமிழ்மொழி ஆசிரியர்களான பெற்றோர் ஊக்குவிப்பு வழங்கியதைப் போல இவரது கணவரான ஏ.எல். பௌஸர் அவர்களும் பக்க துணையாக இருந்து வருகின்றார். 2021.02.09 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மொழித்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகின்றார்.

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US