நீதிமன்ற செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்த திட்டம்
நீதிமன்ற செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டமொன்றை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக புதிய பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் 48வது பிரதம நீதியரசராக ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள ப்ரீதி பத்மன் சூரசேன, இன்றைய தினம் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அவரை வரவேற்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகள்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும்.
அதற்கான துணை செயற்பாடாக நீதிமன்ற செயற்பாடுகள் டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டம் விரைவில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா



