நாட்டில் முதலாவது நீர் மின்கல நிலையத்தை உருவாக்கத் திட்டம்!
நாட்டின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயாவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது.
இந்த திட்டம் ஒரு பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும் என கூறப்பட்டுள்ளது.
சேமிப்பு மின் திட்டம்
குறித்த சேமிப்பு மின் திட்டம், அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதையுடன் இணைப்பதன் மூலம் செயல்படும்.
இந்த திட்டம், மொத்தம் 600 மெகாவாற் திறன் கொண்டுள்ளதுடன் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின்கட்டமைப்பிற்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பிரகாசமான பசுமை எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை மின்சார சபை பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.