அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் எம்.பி அறிவிப்பு
எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நாமல் இவ்வாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று காலை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
நாமலின் ஆசை
இதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
மேலும் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அரசாங்கத்தை கலைக்கும் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.