பருத்தித்துறை நகரசபை கழிவுகள் பருத்தித்துறை பிரதேச சபை கழிவகற்றுமிடத்தில் அகற்றுவதற்கு தடை
பருத்தித்துறை நகரசபை கழிவுகள் பருத்தித்துறை பிரதேச சபை கழிவகற்றுமிடத்தில் அகற்றுவதற்கு (30/06/2026) அன்றிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு அதன் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நேற்று(26) காலை 9:45 மணியளவில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மாவீரர்களுக்கும், அப்பாவி தானமாக கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குற்றச்சாட்டு
அத்துடன் பருத்தித்துறை நகரசபை அண்மைக் காலமாக பருத்தித்துறை பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் கட்டணம் செலுத்தி கழிவகற்றி வந்த நிலையில் அவர்கள் பொருத்தமான முறையில் கழிவகற்றப்படவில்லை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் (30/06/2026) தமது கழிவு அகற்றும் பகுதியில் கழிவு அகற்ற அனுமதிப்பதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
மேலும் பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பாகவும் அது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.