இலங்கையின் கமத் தொழில் அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வம்

Sri Lanka Pakistan
By Aanadhi May 27, 2026 10:13 AM GMT
Report

இலங்கையின் நெல் உற்பத்தி மற்றும் பழங்கள் பயிர்ச்செய்கை உள்ளிட்ட கமத் தொழில்துறை அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காநதவுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (25) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

அதன்போது, இலங்கைக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.

தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

பால் உற்பத்தி

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர், கால்நடை உற்பத்தியில் உலகளவில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளதால், அது சார்ந்த அறிவையும், விவசாய உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் இலங்கைக்கு வழங்க பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது.

பாகிஸ்தானைப் போன்றே இலங்கையும் ஒரு விவசாய நாடாகும் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இலங்கையின் கமத் தொழில் அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வம் | Pakistan Interested In Helping Sl Agricultural

உலக அளவில் கால்நடை உற்பத்தியில், குறிப்பாகப் பால் உற்பத்தியில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே அந்தத் துறையில் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த முடியும்.

நாம் இலங்கைக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானில் சீனி உற்பத்தி, காய்கறி உற்பத்தி மற்றும் பழ உற்பத்தி போன்ற அனைத்துத் துறைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. எமது நாட்டில் சிறந்த பாஸ்மதி அரிசி வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

கால்நடை உற்பத்தி

இலங்கைக்குப் பொருத்தமான பாஸ்மதி அரிசி வகைகளை உருவாக்கிக்கொள்ள எம்மால் உதவ முடியும். அத்துடன், பாகிஸ்தானில் உயர்தரமான, மிகவும் சுவையான மாம்பழ வகைகள் உள்ளன.

அவற்றை இலங்கையில் பயிரிட்டு கூடுதல் விளைச்சல் பெற முடியும். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் கமத்தொழில் அமைச்சின் பெயரை 'உணவுப் பாதுகாப்பு அமைச்சு' என மாற்றியமைத்தோம். நீர் இருந்தபோதிலும் அதனை விநியோகிப்பதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன.

இலங்கையின் கமத் தொழில் அபிவிருத்திக்கு உதவ பாகிஸ்தான் ஆர்வம் | Pakistan Interested In Helping Sl Agricultural

இந்த நிலைமை குடிநீர் விநியோகத்தைப் போன்றே நீர்ப்பாசனத் துறையையும் பாதிக்கின்றது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு வருகை தந்து, அங்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுமாறு கமத்தொழில் அமைச்சருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா

24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US