உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு தடை : நீதிமன்றின் முக்கிய தீர்மானம்
இலங்கையின் உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமனம் செய்வதிலிருந்து ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
இதன்படி எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி இந்த வழக்கின் விசாரணையை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக 2024 ஏப்ரல் 30 அன்று, உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்காலத் தடை விதித்தது,
இதன்படி தலைமை நீதியரசர் பதவியைத் தவிர உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமிக்க குறித்த இரண்டு தரப்பும் தடுக்கப்பட்டனர்.
அரசியலமைப்பு பேரவை நிராகரிப்பு
ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்
எனினும் அதனை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
இதனையடுத்து அரசியல் அமைப்பு பேரவையின் இந்த முடிவை ஆட்சேபித்து சட்டத்தரணி ஒருவர் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போதே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |