பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! யாழில் கல்வி அமைச்சர் உறுதி (PHOTOS)
இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவிற்குமான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியதலைவர் ஜெல்சின்,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் விவகாரம்
எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்த பபில்ராஜ் மற்றும் திவாகர் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமீழீழ விடுதலைப்புலிகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியும் அவர்களுக்கான வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே மாணவர்கள், ஒன்றியத்தின் பிரதிநிதிகளாக அவர்களுடைய வழக்கு தொடரப்பட்டுள்ளது.விரைவில் அவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கம்
மாணவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.இந்த சட்டம் விரைவில் நீக்கப்பட உள்ளது.
குறித்த இரு மாணவர்களது வழக்கு தொடர்பில் நான் சட்டமா அதிபருடன் தொடர்பு கொண்டு விரைவில் அவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை கருத்திற்கொள்கின்றேன். ஒரு வழக்கறிஞராக பல்கலைக்கழக மாணவர்களின் நீதிசார்பாக நான் வழக்குகளில் ஆஜராகியுள்ளேன். வெகுவிரைவில் இச்சட்டம் நீக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் குறித்த மாணவர்களின் வழக்கு எண் விபரங்களையும் பெற்றுக்கொண்டார். இதன் பொழுது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிய பற்குணராஜா,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க,யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க விஜயம்
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க யாழ். பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து மாணவர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத்தலைவர் உடனடியாக கல்வி அமைச்சருக்கும்,மாணவ பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்துள்ளடன், மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு உரிய தீர்வுகளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும் உறுதியளித்துள்ளனர்.






தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
